Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 13 அக்டோபர் 2026 | 27 புரட்டாசி பராபவ வருடம்

ஆயுத பூஜைக்கு 6,199 சிறப்புப் பேருந்துகள்: நாளை மறுநாள் முதல் இயக்கம்

ஆயுத பூஜைக்கு 6,199 சிறப்புப் பேருந்துகள்: நாளை மறுநாள் முதல் இயக்கம்

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக 3 நாட்களில் மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதில் 6,199 சிறப்புப் பேருந்துகள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறியதாவது: வரும் 19-ம் தேதி ஆயுத பூஜையும், 20-ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளன. இதையொட்டி, வழக்கமான பேருந்து சேவைகளுடன் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும். வரும் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 9,086 சிறப்புப் பேருந்துகள் உட்பட மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகைக் காலங்களில் சிறப்புப் பேருந்துகள் ரத்து செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல. ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கப்பட்டால், அந்தத் தொகையை மீட்டு பயணிகளிடம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Advertisement
பண்டிகை நாட்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளுக்கான கட்டண விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் கண்காணிக்கத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பேருந்துகளைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். முன்பதிவு இல்லாமல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் ரயில்வே துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தசரா விடுமுறையை முன்னிட்டு இரண்டு இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் காலநிலைப் பூங்காவிலும் தற்காலிகப் பேருந்து நிலையம் ஏற்படுத்தப்பட உள்ளது. அங்கிருந்து வந்தவாசி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கும்பகோணம் செல்லும் பேருந்துகள் மறைமலை நகரில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படும். இவ்வாறு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு