Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 13 அக்டோபர் 2026 | 27 புரட்டாசி பராபவ வருடம்

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு: 1.08 லட்சம் பேர் தேர்ச்சி!

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு: 1.08 லட்சம் பேர் தேர்ச்சி!

தமிழகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 1,08,781 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குச் சிறப்புத் தகுதித்தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூலை 4-ஆம் தேதியும், உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூலை 5-ஆம் தேதியும் நடைபெற்றது.

Advertisement
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் மொத்தம் 833 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் முதல் தாள் தேர்வு 221 மையங்களிலும், இரண்டாம் தாள் தேர்வு 612 மையங்களிலும் நடைபெற்றது. முதல் தாள் தேர்வை 59,535 பேர் எழுதினர். இரண்டாம் தாள் தேர்வில் 1,60,929 பேர் பங்கேற்றனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின்படி, முதல் தாள் தேர்வில் பங்கேற்றவர்களில் 47,628 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் பங்கேற்றவர்களில் 61,153 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி, இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வில் 47,628 பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வில் 61,153 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமாக 1,08,781 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு