தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில், நாட்டின் முக்கியத் தலைவர்கள் தொடர்பான ரகசியத் தகவல்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பு சார்ந்த விவரங்கள் கசியவிடப்படுவதாக அந்நாட்டு உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ மற்றும் முக்கிய அமைச்சரின் மகள் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் சட்டவிரோதமாகக் கண்காணிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Advertisement
இந்தச் செயலில் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதிபரின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான ஜெனரல் லிஸ்டியோ சிகித் பிரபோவோ உள்ளிட்ட மூன்று போலீஸ் ஜெனரல்களைப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.