Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

அடையாளம் தெரியாத நபரால் தொடர்ந்து தொல்லை: காவல் ஆணையரிடம் மேயர் பிரியா புகார்

அடையாளம் தெரியாத நபரால் தொடர்ந்து தொல்லை: காவல் ஆணையரிடம் மேயர் பிரியா புகார்
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையர் அமல் ராஜை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில், அடையாளம் தெரியாத ஒருவர் தொடர்ந்து தனக்கு தொல்லை அளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன்னை அவதூறாக சித்தரித்து தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனுடன், தனது அலுவலக தொலைபேசி எண்ணுக்கும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து தொடர்ந்து தொந்தரவு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேயர் பிரியா அளித்த புகாரைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Advertisement
அடையாளம் தெரியாத நபர் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக மேயர் பிரியா காவல்துறையை அணுகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு