Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
சனி | 29 ஆகஸ்ட் 2026 | 13 ஆவணி பராபவ வருடம்

அஜித்தின் ரேசிங் அணிக்கு புதிய களம்.. மிச்செலின் லு மான்ஸ் கோப்பையில் பங்கேற்பு

நடிகர் அஜித்குமார் பெயரில் இயங்கி வரும் ரேசிங் அணி, இங்கிலாந்தின் பிரபலமான சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நடைபெறவுள்ள 2026-ம் ஆண்டுக்கான மிச்செலின் லு மான்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘டேர்டெவில்’ படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இதனிடையே, சர்வதேச கார் பந்தயங்களில் அவர் மேற்கொண்ட பயணம் மற்றும் சந்தித்த சவால்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற ஒரு மணி நேர ஆவணப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது.கார் பந்தயத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் அஜித்குமார், தனது பெயரில் தனி ரேசிங் அணியை உருவாக்கி சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த வாரமும் ஐரோப்பாவில் நடைபெற்ற மிச்செலின் லு மான்ஸ் கோப்பை போட்டியில் அவரது அணி கலந்து கொண்டது.இந்த நிலையில், அஜித் குமார் ரேசிங் அணி அடுத்ததாக சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நடைபெறும் 2026 மிச்செலின் லு மான்ஸ் கோப்பை தொடரில் களமிறங்குகிறது.

Advertisement
இந்தப் போட்டியில் அஜித்தின் அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.இதற்கிடையே, கடந்த வாரம் ஐரோப்பாவில் நடைபெற்ற போட்டியின்போது அஜித் ஓட்டிய கார் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. எனினும், அஜித்குமார் காயமின்றி தப்பினார்.கார் பந்தயத்தில் அஜித் விபத்தை சந்திப்பது இதுவே முதல் முறை அல்ல. ஏற்கனவே பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் அவர் விபத்துகளை எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு