Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 06 நவம்பர் 2026 | 20 ஐப்பசி பராபவ வருடம்

சொந்த ஊருக்குச் சென்ற வடமாநில தொழிலாளர்கள்... ஆட்கள் பற்றாக்குறையால் தவிக்கும் திருப்பூர் நிறுவனங்கள்

சொந்த ஊருக்குச் சென்ற வடமாநில தொழிலாளர்கள்... ஆட்கள் பற்றாக்குறையால் தவிக்கும் திருப்பூர் நிறுவனங்கள்

'டாலர் சிட்டி' என அழைக்கப்படும் திருப்பூரில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நூற்பாலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் தங்கி வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக பீகார், ஜார்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். ஆடை உற்பத்தி மட்டுமின்றி கட்டுமானம், சாலைப் பணிகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இவர்களின் பங்களிப்பு உள்ளது. அண்மைக்காலமாக விவசாயப் பணிகளிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். உள்ளூர் தொழிலாளர்களின் எண்ணிக்கை போதிய அளவில் இல்லாததால், பல நிறுவனங்கள் வெளிமாநிலத் தொழிலாளர்களைச் சார்ந்தே இயங்கி வருகின்றன. இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வடமாநிலங்களில் இப்பண்டிகை பொதுவாக ஐந்து நாட்கள் வரை கொண்டாடப்படுவது வழக்கம். முதல் நாளில் தங்கம், வெள்ளி மற்றும் புதிய பாத்திரங்கள் வாங்குவது முக்கிய நிகழ்வாகும். இரண்டாவது நாளில் வீடுகளை கோலங்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரித்து லட்சுமி தேவியை வரவேற்பார்கள். மூன்றாவது நாளில் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

Advertisement
நான்காவது நாள் பசுக்களை வழிபடும் 'கோவர்த்தன பூஜை' நடைபெறும். ஐந்தாவது நாளில் சகோதரர்களுடன் பெண்கள் கொண்டாடும் 'பாய் தூஜ்' பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் தீபாவளிக் கொண்டாட்டம் 20 நாட்கள் வரை நீடிப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டு முழுவதும் உழைப்பதன் முக்கிய நோக்கமே தீபாவளியைச் சொந்த ஊரில் குடும்பத்தினருடன் சிறப்பாகக் கொண்டாடுவதுதான் என்பது பல வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணமாக உள்ளது. இதனால், பண்டிகையைக் கொண்டாடுவதற்காக திருப்பூரில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். தீபாவளி நிறைவடைந்த பின்னரும் அவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதற்கு சில வாரங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் ஏற்கெனவே தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் திருப்பூரின் பல்வேறு தொழில் நிறுவனங்கள், தற்போது உற்பத்தி மற்றும் பணிகளைத் தொடர முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்க, புலம்பெயர் தொழிலாளர்களை மட்டுமே சார்ந்திருக்காமல், உள்ளூர் பகுதிகளிலேயே திறமையான தொழிலாளர்களை உருவாக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தொழில் நிறுவனத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு