Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 22 செப்டம்பர் 2026 | 6 புரட்டாசி பராபவ வருடம்

கோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு இலவச சிலிண்டர் மீண்டும் வழங்க உத்தரவு

கோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு இலவச சிலிண்டர் மீண்டும் வழங்க உத்தரவு

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் 85 வயதான கமலாத்தாள். கடந்த 30 ஆண்டுகளாக இவர் அப்பகுதியில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். ஆரம்பத்தில் விறகு அடுப்பைப் பயன்படுத்தி இட்லி சமைத்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக கியாஸ் சிலிண்டர் மூலம் இட்லி தயாரித்து வருகிறார். கமலாத்தாளின் சேவையை பாராட்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு கடை நடத்துவதற்கும், வசிப்பதற்கும் உதவிகள் செய்து வந்துள்ளனர். மேலும், கியாஸ் நிறுவனத்தினர் கடந்த பல ஆண்டுகளாக அவருக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக இலவச கியாஸ் சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

Advertisement
இதனால் வழக்கம்போல் ஒரு ரூபாய்க்கு இட்லி தயாரித்து விற்பனை செய்வதில் கமலாத்தாளுக்கு சிரமம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அவர் மனு அளித்தார். அப்போது, “இதுவரை இலவசமாக கியாஸ் சிலிண்டர் வழங்கி வந்தனர். தற்போது ஏன் நிறுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. மீண்டும் வழக்கம்போல் இலவசமாக சிலிண்டர் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அமைச்சர் சம்பத்குமார் அறிவுறுத்தலின்படி, கமலாத்தாளுக்கு தொடர்ந்து தடையின்றி இலவச கியாஸ் சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்க கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹108.50
🛢️ Diesel ₹100.30
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு