Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 13 அக்டோபர் 2026 | 27 புரட்டாசி பராபவ வருடம்

லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு: கேரள உயர் நீதிமன்றத்தில் பினராயி விஜயன் மேல்முறையீடு

லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு: கேரள உயர் நீதிமன்றத்தில் பினராயி விஜயன் மேல்முறையீடு

கேரள முதல்வராக பினராயி விஜயன் பதவி வகித்த காலத்தில், அவரது மகள் வீணா நடத்தி வந்த எக்சலாஜிக் நிறுவனத்துக்கு கொச்சின் மினரல்ஸ் நிறுவனம் முறைகேடாக ரூ.2.78 கோடி வழங்கியதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாகச் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு கேரள காவல்துறை டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. அமலாக்கத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்காகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை கேரள அரசு அமைத்தது. இதற்கிடையே, பினராயி விஜயன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி கே.எம். ஷாஜகான் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ. பதாருதீன், அமலாக்கத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் பினராயி விஜயன், வீணா, முகமது ரியாஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் உடனடியாக வழக்குப்பதிவு செய்யுமாறு திருவனந்தபுரத்தில் உள்ள ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

Advertisement
இந்த உத்தரவை எதிர்த்து பினராயி விஜயன், வீணா மற்றும் முகமது ரியாஸ் ஆகியோர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். தங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் மனுவில் கோரியுள்ளனர். மேலும், அமலாக்கத்துறையின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு நேரடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது தவறான நடைமுறை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீசார் இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு