Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 06 நவம்பர் 2026 | 20 ஐப்பசி பராபவ வருடம்

'ராமாயணா' படத்தை பாராட்டிய ராஜமவுலி - ரன்பீர் கபூர், யாஷ் நடிப்புக்கு புகழாரம்

'ராமாயணா' படத்தை பாராட்டிய ராஜமவுலி - ரன்பீர் கபூர், யாஷ் நடிப்புக்கு புகழாரம்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘ராமாயணா’. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தைப் பார்த்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, அதன் பிரம்மாண்டமான காட்சியமைப்பையும் நடிகர்களின் நடிப்பையும் பாராட்டியுள்ளார். ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற பிரம்மாண்ட படைப்புகளை இயக்கிய ராஜமவுலி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘ராமாயணா’ திரைப்படம் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், படத்தின் பிரம்மாண்டமும், பெரிய திரையில் காட்சிகள் இடம்பெற்றுள்ள விதமும் வியக்க வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூர், குறிப்பாக வனவாசம் தொடங்கிய பின்னர் அமைதியும் கம்பீரமும் கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகப் புகழ்ந்துள்ளார். மேலும், ராவணனாக நடித்துள்ள யாஷ் தனது தோற்றத்தாலும் வலிமையான நடிப்பாலும் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும், சீதையாக நடித்துள்ள சாய் பல்லவி அழகும் கம்பீரமும் நிறைந்த நடிப்பை வழங்கியுள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.

Advertisement
படத்தின் முன் கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகத் தெரிவித்த ராஜமவுலி, திரைப்படத்தின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்துப் பார்த்ததாகக் கூறியுள்ளார். இத்தகைய பிரம்மாண்டமான படைப்பைத் திரையில் சிறப்பாகக் கொண்டு வந்த தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். முன்னதாக, ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் வெளியானபோதும் ராஜமவுலி படக்குழுவினரைப் பாராட்டியிருந்தார். நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும், புகழ்பெற்ற இதிகாசத்தை இவ்வளவு பிரம்மாண்டமாகத் திரைப்படமாக உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது திரைப்படம் வெளியான பிறகும் தனது பாராட்டுகளை மீண்டும் பதிவு செய்துள்ள ராஜமவுலியின் கருத்துகள், ‘ராமாயணா’ படக்குழுவினரிடமும் ரசிகர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு