மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சீமான் நாளை முதல் பிரசாரம்
மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் களமிறங்கியுள்ள கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை (திங்கட்கிழமை) முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாராபுரம் தொகுதியில் 21, 22, 23, அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய 5 நாட்களும், மதுராந்தகம் தொகுதியில் 26, 27, 30 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி ஆகிய 4 நாட்களும் சீமான் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.