Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 12 அக்டோபர் 2026 | 26 புரட்டாசி பராபவ வருடம்

தண்ணீருக்குள் மின்னல் வேகத்தில் பாய்ந்து வேட்டை! நீர்நாயைக் காண ஏரிக்கரையில் குவியும் மக்கள்!

தண்ணீருக்குள் மின்னல் வேகத்தில் பாய்ந்து வேட்டை! நீர்நாயைக் காண ஏரிக்கரையில் குவியும் மக்கள்!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏரியில் அரிய வகை நீர்நாய் ஒன்று தென்பட்டு வருவதால், அதைக் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் ஏரிக்கரையில் திரண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் கிராமத்தில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் கடந்த சில நாட்களாக அரிய வகை நீர்நாய் ஒன்று சுற்றித் திரிந்து வருகிறது. ஏரி நீரில் எவ்வித தயக்கமுமின்றி நீந்தி விளையாடும் இந்த நீர்நாய், அங்குள்ள மீன்கள் மற்றும் ஆமைகளை லாவகமாக வேட்டையாடி உணவாக உட்கொண்டு வருகிறது. பொதுவாக வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் அதிகம் காணப்படும் இந்த நீர்நாய், கிராமப்புற ஏரிக்கு வந்திருப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது எப்படி இந்த ஏரிக்கு வந்தது எனத் தெரியாமல் மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

Advertisement
இதற்கிடையே, தண்ணீருக்குள் மூழ்கி மின்னல் வேகத்தில் நீந்திச் சென்று மீன்கள் மற்றும் ஆமைகளை வேட்டையாடும் நீர்நாயின் செயல்பாடுகளைக் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஏரிக்கரைக்கு வருகின்றனர். மேலும், இளைஞர் ஒருவர் நீர்நாய் ஆமையை வேட்டையாடும் காட்சியைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏரியில் காணப்படும் அரிய வகை நீர்நாயை வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்து, அதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு