Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 12 அக்டோபர் 2026 | 26 புரட்டாசி பராபவ வருடம்

சென்னை வேளச்சேரியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்: சாமர்த்தியமாக செயல்பட்டு உயிர் தப்பிய வாலிபர்கள்

சென்னை வேளச்சேரியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்: சாமர்த்தியமாக செயல்பட்டு உயிர் தப்பிய வாலிபர்கள்

சென்னை வேளச்சேரியில் காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியதைத் தொடர்ந்து, ஓட்டுநர் உடனடியாக செயல்பட்டதால் காரில் இருந்த இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும், கார் தீயில் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரைச் சேர்ந்த கவின் (26), கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது நண்பர்களை காரில் அழைத்துக்கொண்டு, ராஜலட்சுமி நகர் 3-வது மெயின் சாலை வழியாக கங்கை நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதைக் கவனித்த கவின், தாமதிக்காமல் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.

Advertisement
மேலும், காருக்குள் இருந்த நண்பர்களையும் உடனடியாக வெளியேறச் செய்தார். அவர்கள் பாதுகாப்பாக இறங்கிய சிறிது நேரத்திலேயே கார் தீப்பற்றி வேகமாக எரியத் தொடங்கியது. இதுகுறித்து வேளச்சேரி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காரில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு