Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 07 அக்டோபர் 2026 | 21 புரட்டாசி பராபவ வருடம்

'ஊடகங்களை அவமதிப்பது குடிமக்களை அவமதிப்பதற்கு சமம்' - நடிகர் பிரகாஷ் ராஜ்

'ஊடகங்களை அவமதிப்பது குடிமக்களை அவமதிப்பதற்கு சமம்' - நடிகர் பிரகாஷ் ராஜ்

செய்தியாளர் சந்திப்புகளை தவிர்க்கும் அரசியல் தலைவர்களுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊடகங்களை புறக்கணிப்பது என்பது மக்களை அவமதிப்பதற்கு இணையானது என அவர் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரகாஷ் ராஜ், தான் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல என்றும், மக்கள் நலனை மையமாகக் கொண்ட அரசியலில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே ஆட்சியை நடத்தினாலும், குடிமக்களும் அரசியல் செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும் என்பதை அரசியலமைப்பு வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். மேலும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் ஏன் செய்தியாளர்களை சந்திக்க மறுக்கிறார்கள் என்றும், பத்திரிகைகளை ஏன் அவமதிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முதல்-அமைச்சராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும், மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பொதுமக்களின் சார்பில் ஊடகங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளதாக பிரகாஷ் ராஜ் கூறினார்.

Advertisement
இதனிடையே, இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் ஆணைய உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் இந்திய தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சர் இடம்பெறச் செய்ததன் மூலம், ஆளும் கட்சிக்கு சாதகமான 2:1 பெரும்பான்மை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் நியமன நடைமுறை குறித்தும் அவர் அதிருப்தி தெரிவித்தார். மேலும், எஸ்.ஐ.ஆர். பணிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டினார். பணியிடத்திலோ, மருத்துவமனையிலோ அல்லது வேறு காரணங்களால் வீட்டில் இல்லாத நிலையிலோ இருந்த குடிமக்கள், 'வரவில்லை' அல்லது 'இடம் பெயர்ந்தார்' எனக் குறிப்பிடப்பட்டு, தன்னிச்சையாக வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு