ஹோட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஹோட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஹோட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

நெல்லையில் ஹோட்டல் உரிமையாளரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்ற 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆண்டாள் தெருவைச் சேர்ந்தவர் காஜா செரிப். இவர் மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டையில் ஹோட்டல்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில், பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள தனது ஹோட்டலில் கணக்கு பணிகளை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் மேலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 5 பேர், காஜா செரிப்பை வழிமறித்துள்ளனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த காஜா செரிப் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டு தப்பிச் சென்ற 5 மர்ம நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஹோட்டல் உரிமையாளர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.