ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: மோடியுடன் ஒரே காரில் பயணித்த புதின்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: மோடியுடன் ஒரே காரில் பயணித்த புதின்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: மோடியுடன் ஒரே காரில் பயணித்த புதின்

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு கிர்கிஸ்தானுக்கு சென்றார்.மத்திய ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி முதலில் உஸ்பெகிஸ்தான் சென்றிருந்தார். அந்நாட்டு தலைநகர் தாஷ்கண்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு வாழும் இந்தியர்களையும் அவர் சந்தித்தார். தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.இந்த சந்திப்பின்போது இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் உஸ்பெகிஸ்தானிடம் இருந்து யுரேனியம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தமும் இடம்பெற்றுள்ளது.ஏற்கனவே அமெரிக்கா, கனடா, கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடமிருந்து யுரேனியம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. உஸ்பெகிஸ்தான் அதிபர், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதையும் வழங்கி கவுரவித்தார்.உஸ்பெகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, நேற்றிரவு கிர்கிஸ்தானுக்கு புறப்பட்டார். அந்நாட்டின் தலைநகர் பிஷ்கெக் விமான நிலையத்தில் அவரை அதிபர் அடில்பெக் கசிமலியேவ் நேரில் வரவேற்றார். பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.பிஷ்கெக்கில் இன்றும் நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இந்த அமைப்பில் சீனா, இந்தியா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.மாநாட்டையொட்டி பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் ஈரான் அதிபர் பெசஸ்கியானை அவர் இன்று சந்தித்தார். இந்த பேச்சுவார்த்தையில் மேற்காசிய போர் சூழல், குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை தொடர்பான விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், இந்தியா-ஈரான் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம், ரஷ்யா-உக்ரைன் போர், மேற்காசிய நிலவரம், கச்சா எண்ணெய் விவகாரம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, பிஷ்கெக்கில் நடைபெறும் சர்வதேச நாடோடி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஒரே காரில் இணைந்து பயணம் செய்தனர்.பிஷ்கெக் அரங்கில் நடைபெற்ற 6-வது உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகளின் பிரமாண்ட தொடக்க விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.தொடர்ந்து சீன அதிபர்ஷிஜின்பிங்உள்ளிட்டதலைவர்களையும்பிரதமர்மோடிசந்தித்துபேச்சுவார்த்தைநடத்தஉள்ளார்.இந்தசந்திப்புகளில்பாதுகாப்புமற்றும்வர்த்தகம்உள்ளிட்டவிவகாரங்கள்முக்கியமாகஇடம்பெறும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.சீனஅதிபருடனானபேச்சுவார்த்தையின்போதுஎல்லைவிவகாரமும்எடுத்துரைக்கப்படவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.