ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி: புதினை சந்திக்க வாய்ப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி: புதினை சந்திக்க வாய்ப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி: புதினை சந்திக்க வாய்ப்பு

பிரதமர் மோடி நாளை முதல் 4 நாட்கள் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக உஸ்பெகிஸ்தான் செல்லும் அவர், தலைநகர் தாஷ்கண்டில் 2 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக, பல்வேறு துறைகளில் அந்த நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.இதைத்தொடர்ந்து கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்கிறார். மாநாட்டில் இந்தியாவின் பாதுகாப்பு, இணைப்பு மற்றும் சாத்தியக்கூறு சார்ந்த முன்னுரிமைகள் குறித்து அவர் உரையாற்ற உள்ளார்.இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் பயணத்தில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் இந்தியா-ரஷியா உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு சந்திப்பை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிற உலகத் தலைவர்களுடனான சந்திப்புகள் தொடர்பான விவரங்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.