“வேறு எப்போது உதவப் போகிறோம்?” – நேபாள மக்களுக்காக குரல் கொடுத்த சோனு சூட்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

02 Sep 2026 www.thinathulir.com

“வேறு எப்போது உதவப் போகிறோம்?” – நேபாள மக்களுக்காக குரல் கொடுத்த சோனு சூட்

“வேறு எப்போது உதவப் போகிறோம்?” – நேபாள மக்களுக்காக குரல் கொடுத்த சோனு சூட்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் முன்வவேண்டும்எனஅவர்வேண்டுகோள்விடுத்துள்ளார்.இமயமலைப் பகுதியில் உள்ள திபெத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.பாறைகள், மண், சேறு மற்றும் சகதியுடன் வேகமாகப் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் சிக்கினர். உயிரைக் காப்பாற்ற பலர் ஓடியபோதிலும், வெள்ளப்பெருக்கின் வேகம் அவர்களை அடித்துச் சென்றது.இந்தப் பேரழிவில் இதுவரை 1,127 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 ஆயிரம் பேரைக் காணவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தாலும், வெள்ளம் ஏற்பட்டு 6 நாட்கள் கடந்துள்ளதால், காணாமல் போனவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இதனிடையே, காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவில் வளாகத்தில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கிடைக்காத நிலையில், அவர்களுக்கான இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன.நேபாளத்தின் நிலைமையை நேரில் ஆய்வு செய்த சோனு சூட், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கி வருகிறார். அதேபோல், நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்திய அரசின் நடவடிக்கைகளையும் அவர் பாராட்டியுள்ளார்.செய்தியாளர்களிடம் பேசிய சோனு சூட், நேபாளத்தில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகள் சிறப்பாக இருப்பதாகவும், இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்கும்போது, அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு நீண்ட காலம் ஆகும் என்பது தெரிகிறது என்று தெரிவித்த அவர், “இப்போது நாம் அவர்களுக்கு உதவவில்லை என்றால், வேறு எப்போது உதவப் போகிறோம்?” என கேள்வி எழுப்பினார்.பெரிய நிறுவனங்கள் தங்களது CSR எனப்படும் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியை நேபாள மக்களுக்கு உதவ பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் சோனு சூட் கேட்டுக்கொண்டார். மேலும், ‘சூட் சேரிட்டி பவுண்டேஷன்’ மூலம் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.