‘வேட்டுவம்’ படத்தில் கேமியோவில் நடிக்கிறாரா ஸ்ருதிஹாசன்?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
12 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 12 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

‘வேட்டுவம்’ படத்தில் கேமியோவில் நடிக்கிறாரா ஸ்ருதிஹாசன்?

‘வேட்டுவம்’ படத்தில் கேமியோவில் நடிக்கிறாரா ஸ்ருதிஹாசன்?

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ எனப் பல படங்களை இயக்கிய பா.ரஞ்சித், கடைசியாக ‘தங்கலான்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து, அவர் எழுதி இயக்கும் புதிய படமாக ‘வேட்டுவம்’ உருவாகி வருகிறது. நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ், பகத் பாசில் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. சோபிதா துலிபாலா கதாநாயகியாக நடித்துள்ளார். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அறிவியல் புனைகதை அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக முன்னதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் ‘வேர்ட் ஆப் வேட்டுவம்’ (Word of Vettuvam) என்ற வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘வேட்டுவம்’ படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் அவர், இப்படத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.