‘வெள்ளத்தில் இருந்து உயிரைக் காப்பாற்ற ஓடினோம்’ – நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பியவர்கள் உருக்கமான பேட்டி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

‘வெள்ளத்தில் இருந்து உயிரைக் காப்பாற்ற ஓடினோம்’ – நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பியவர்கள் உருக்கமான பேட்டி

‘வெள்ளத்தில் இருந்து உயிரைக் காப்பாற்ற ஓடினோம்’ – நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பியவர்கள் உருக்கமான பேட்டி

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை திரும்பினர். அப்போது, வெள்ளம் சுனாமி போல் பெருக்கெடுத்து வந்த நிலையில், உயிரைக் காப்பாற்ற ஓடியதாக அவர்கள் தங்களது அதிர்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சேர்ந்த சத்யா கூறியதாவது: “கைலாஷ் யாத்திரைக்காக சென்னை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 57 பேர் சென்றிருந்தோம். புனிதப் பயணமாக சீனாவில் இருந்தபோது, சம்பவம் நடந்த நாளில் காலை 8 மணியளவில் சோதனை நடைபெற்றது. அப்போது 3 பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருந்தோம்.பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஏதோ புழுதி எழுவது போல் தெரிந்தது. அதை செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தோம். ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த காட்சி மிகப்பெரிய அளவில் சுனாமி போல் எழுந்து வந்தது.ஆரம்பத்தில் அதன் தீவிரத்தை எங்களால் உணர முடியவில்லை. நாங்கள் வழக்கம்போலவே இருந்தோம். பின்னர் வெள்ளம் வேகமாக வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அனைவரும் ஓடத் தொடங்கினர். அதன்பிறகே பேருந்தில் இருந்து இறங்கி, உயிரைக் காப்பாற்ற நாங்களும் ஓடினோம்.நேபாளத்தில் மீட்புக் குழுவினர் எங்களை மீட்டு தேவையான உதவிகளை செய்தனர். சுமார் 3 மணி நேரம் மரங்களைப் பிடித்தபடி நடந்து சென்றோம். அப்போது எங்களது கைகளில் முட்கள் குத்தி பல இடங்களில் காயம் ஏற்பட்டது.தமிழ்நாடு அரசு எங்களுக்கு செய்த உதவி மிகப்பெரியது. எங்களை பாதுகாப்பாக மீட்டு, தங்கத்தட்டில் வைத்து அழைத்து வந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த அளவுக்கு தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்து, பத்திரமாக தாயகம் அழைத்து வந்துள்ளது” என்று சத்யா தெரிவித்தார். 4 அமைச்சர்கள் டெல்லியில் முகாம்இதுகுறித்து அமைச்சர் ஆனந்த் கூறுகையில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் ஆகிய 4 பேரும் டெல்லியில் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.அவர்கள் அங்கிருந்து நிலவரங்களை உடனுக்குடன் முதல்-அமைச்சர் விஜய்க்கு தெரிவித்ததாகவும், மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக மேற்கொள்ள முதல்-அமைச்சர் அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் கூறினார். 4 அமைச்சர்களும் டெல்லியில் தொடர்ந்து முகாமிட்டுள்ள நிலையில், அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அனைத்தும் வேகமாக நடைபெற்று வருவதாகவும், வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைவரும் பாதுகாப்பாகவும் நலமுடனும் தாயகம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அமைச்சர் ஆனந்த் கூறினார்.