வெள்ள பாதிப்பில் மற்றொரு சோகம்; ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருள் தாக்கி முதியவர் பலி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வெள்ள பாதிப்பில் மற்றொரு சோகம்; ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருள் தாக்கி முதியவர் பலி

வெள்ள பாதிப்பில் மற்றொரு சோகம்; ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருள் தாக்கி முதியவர் பலி

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட நிவாரணப் பொருள் தாக்கியதில் 58 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் ஒன்று சென்றுள்ளது. அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து கீழே வீசப்பட்ட நிவாரணப் பொருள், அதனைப் பெறுவதற்காக கூடியிருந்த மக்கள் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் 58 வயது முதியவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உயிரிழந்த நிலையில், உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை காவல் அதிகாரி சவீந்திர குமார் தெரிவித்துள்ளார். மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இதற்கிடையில், மற்றொரு சம்பவத்தில் ஹெலிகாப்டர் ஒன்று குறைந்த உயரத்தில் பறந்து சென்றபோது ஏற்பட்ட காற்றின் வேகத்தில், கூடாரம் ஒன்றின் மேற்கூரை பெயர்ந்து தூக்கி வீசப்பட்டது. இதில் பெண் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக காவல் அதிகாரி விம்லேஷ் குமார் தெரிவித்துள்ளார்.