‘வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொண்டு ஆடமாட்டேன்’ - நடிகர் சூரி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

‘வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொண்டு ஆடமாட்டேன்’ - நடிகர் சூரி

‘வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொண்டு ஆடமாட்டேன்’ - நடிகர் சூரி

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனிடையே, சென்னை தரமணியில் நடைபெற்ற ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்பட நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது, நடிகர் சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘மண்டாடி’ படத்தின் வெற்றிக்காக அவருக்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து பேசிய சூரி, தனக்கு கிடைத்த வெற்றியை தலையில் ஏற்றிக்கொண்டு செயல்படப் போவதில்லை என தெரிவித்தார். “நீங்கள் அளித்த வெற்றியை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வேன். அதை வைத்து என் விருப்பப்படி செயல்படாமல், அடுத்தடுத்த பணிகளை நோக்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பேன்” என்று அவர் கூறினார்.