வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்...!
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

04 Sep 2026 www.thinathulir.com

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்...!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்...!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் பூமியை கண்காணிக்கும் ‘இ.ஓ.எஸ்.-5’ செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ‘ஜூசாட்-1 ஏ’ என அழைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், இஸ்ரோவின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.ஏவுதலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நிறைவடைந்த நிலையில், ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணியும் முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் தொடங்கியது.கவுண்ட்டவுன் நிறைவடைந்ததும், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.ஏவப்பட்ட சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு, ‘இ.ஓ.எஸ்.-5’ செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவிநிலை சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமடைந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இந்த செயற்கைக்கோள் இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம் இந்திய நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணித்து, நிகழ்காலத்துக்கு நெருக்கமான புகைப்படங்களை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தியாவின் எல்லைப் பகுதிகளையும் தொடர்ந்து கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும். புவிநிலை சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவை கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் இதுவாகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.