வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் – நாளை பூமிக்கு திரும்பும் விண்கலம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
14 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் – நாளை பூமிக்கு திரும்பும் விண்கலம்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் – நாளை பூமிக்கு திரும்பும் விண்கலம்

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, விண்கலங்கள் மற்றும் செயற்கைக்கோள்களை ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மனிதர்களையும் விண்கலங்களையும் பூமியில் இருந்து நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கில் ஸ்டார்ஷிப் (Starship) என்ற பிரம்மாண்ட ராக்கெட்டை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. வழக்கமான ராக்கெட்டுகளில் எரிபொருளை எடுத்துச் செல்லும் பூஸ்டர்கள், தங்களது பணியை முடித்தவுடன் ராக்கெட்டில் இருந்து பிரிந்து கடலில் விழுவது வழக்கம். ஆனால், ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் சிறப்பம்சம், அதன் அனைத்து பாகங்களையும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகும். இதன்படி, ராக்கெட்டின் பாகங்கள் மீண்டும் ஏவுதளத்திற்குத் திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அவை கடலில் விழும் வகையில் திசைதிருப்பப்படும். இதுவரை ஸ்டார்ஷிப் ராக்கெட்டை 14 முறை விண்ணில் ஏவியுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தற்போது 15-வது சோதனையையும் மேற்கொண்டுள்ளது. அதன்படி, 26 ஸ்டார்லிங்க் வி3 (Starlink V3) செயற்கைக்கோள்களுடன் கூடிய ஸ்டார்ஷிப் ராக்கெட், நேற்று டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் பறந்த சிறிது நேரத்தில் ராக்கெட்டில் இருந்து பிரிந்த சூப்பர் ஹெவி பூஸ்டர், மீண்டும் ஏவுதளத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக, அந்த பூஸ்டர் கடலில் இறக்கப்பட்டது. அதேநேரத்தில், ராக்கெட்டில் கொண்டு செல்லப்பட்ட 26 ஸ்டார்லிங்க் வி3 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது மணிக்கு சுமார் 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில், ஒலியின் வேகத்தை விட 23 மடங்கு வேகத்தில் பயணிக்கும் விண்கலம், பூமியை 14 முறை சுற்றி வரத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை (நவம்பர் 15) அதிகாலை மீண்டும் ஏவுதளத்திற்கு திரும்ப உள்ளது. அப்போது, ஏவுதளத்தில் பொருத்தப்பட்டுள்ள பிரம்மாண்ட இயந்திரக் கரங்கள் (Mechanical Arms) விண்கலத்தைப் பிடித்து நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முயற்சியை வெற்றிகரமாகச் செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.