தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (09.10.26) நடந்த தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர். தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதை முன்னிட்டு தமிழ்நாடு முழுதும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வெற்றி கொண்டாட்டம் மதுரையில் வழக்கறிஞர் அணி சார்பில் கே.பி.பாண்டி மூத்த அரசு வழக்கறிஞர் தலைமையில் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும்,பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்ட ரடினர். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அணி இணை அமைப்பாளர் செந்தில் பிரபாகர், அரசு வழக்கறிஞர் விக்னேஷ், மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர். ஹரிஷ் - மதுரை மாவட்ட செய்தியாளர்