விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா

விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை அவரது மனைவி சங்கீதா திரும்பப் பெற்றுள்ளார். லண்டனில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரான அவர், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பமில்லை என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.விஜய் மற்றும் சங்கீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இருவரும் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராகினர்.இருவரும் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் என்பதால், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என இரு தரப்பிலும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து, கடந்த ஜூன் 15-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், நீதிபதி சில நடைமுறை விவரங்களை கேட்டறிந்ததுடன், இருவரையும் சமரச மையத்துக்கு அனுப்புவது குறித்து கருத்து தெரிவித்தார். பின்னர் வழக்கின்விசாரணை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.அதன்படி, இன்று நடைபெற்ற விசாரணையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த காரணத்தால் முதல்-அமைச்சர் விஜய் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.இதற்கிடையில், லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி, விவாகரத்து மனுவை திரும்பப் பெறுவதாக கூறினார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.