விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க அரசு மானியம்: யாருக்கு எவ்வளவு? என்னென்ன ஆவணங்கள் தேவை?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க அரசு மானியம்: யாருக்கு எவ்வளவு? என்னென்ன ஆவணங்கள் தேவை?

விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க அரசு மானியம்: யாருக்கு எவ்வளவு? என்னென்ன ஆவணங்கள் தேவை?

தமிழகத்தில் பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள, பாசன வசதி இல்லாத பொதுப்பிரிவு விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைப்பதற்கு அரசு மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான தகுதிகள், மானியத் தொகை மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து வேளாண்மைப் பொறியியல் துறை விளக்கம் அளித்துள்ளது. எவ்வளவு மானியம் வழங்கப்படும்? வேளாண்மைப் பொறியியல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய விவரங்கள்: - சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகள்:திட்டச் செலவில் 60 சதவீதம் மானியம்; அதிகபட்சம் ரூ.1.20 லட்சம். -இதர பொதுப்பிரிவு விவசாயிகள்: திட்டச் செலவில் 50 சதவீதம் மானியம்; அதிகபட்சம் ரூ.1 லட்சம். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இந்த மானியத்தைப் பெறுவதற்கு விவசாயிகள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்: - பொதுப்பிரிவைச் சேர்ந்த விவசாயியாக இருக்க வேண்டும். - சொந்தமாகப் புஞ்சை நிலம் வைத்திருக்க வேண்டும். - விண்ணப்பதாரரின் பெயரில் ஒரே இடத்தில் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.- கூட்டுப் பட்டாதாரராக இருக்கக் கூடாது. - நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாத அல்லது தூர்ந்துபோன கிணறுகளைக் கொண்ட புஞ்சை நில விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மானியத்திற்காக விண்ணப்பிக்கும் விவசாயிகள் கீழ்க்கண்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: 1. விவசாயியின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம். 2. வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல். 3. சிறு அல்லது குறு விவசாயி என்பதற்கான சான்றிதழ் — 60 சதவீத மானியம் கோரும் பெண் விவசாயிகள் அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு மட்டும். இத்தகவல்களை தமிழக வேளாண்மைப் பொறியியல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.