விழிஞ்ஞம் துறைமுகத்தில் நேரடி சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி சேவை தொடக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
19 Aug 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 19 Aug 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

விழிஞ்ஞம் துறைமுகத்தில் நேரடி சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி சேவை தொடக்கம்

விழிஞ்ஞம் துறைமுகத்தில் நேரடி சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி சேவை தொடக்கம்

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் இன்று முதல் நேரடி சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவைகள் தொடங்கியுள்ளன. இதுவரை வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்குகளை மற்ற கப்பல்களுக்கு மாற்றி அனுப்பும் சரக்கு மாற்று மையமாக செயல்பட்டு வந்த விழிஞ்ஞம் துறைமுகம், தற்போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குகளை நேரடியாகக் கையாளும் வசதியைப் பெற்றுள்ளது.கேரள அரசு மற்றும் அதானி போர்ட்ஸ் இணைந்து உருவாக்கிய இந்த துறைமுகம், இந்தியாவின் முதல் ஆழ்கடல் சரக்கு மாற்று துறைமுகமாகவும், தெற்காசியாவின் முதல் முழுமையான தானியங்கி சரக்கு பெட்டக துறைமுகமாகவும் விளங்குகிறது. கடந்த 18 மாதங்களில் மட்டும் 20 லட்சம் சரக்கு பெட்டகங்களை துறைமுகம் கையாண்டுள்ளது.நேரடி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவை தொடங்கப்பட்டுள்ளதால், சரக்குகளை கையாள்வதற்கான செலவும், நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.விழிஞ்ஞம் துறைமுகத்தில் நேரடி ஏற்றுமதி - இறக்குமதி சேவையை முதல்-மந்திரி வி.டி. சதீசன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.