வில்வித்தையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வில்வித்தையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

வில்வித்தையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 45 நாடுகள் பங்கேற்கும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான தனிநபர் ரிகர்வ் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் 17 வயது வீராங்கனை கும்கும் மொஹோட் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் தென் கொரியாவின் ஓ யேஜினை எதிர்கொண்ட கும்கும், அவரை வீழ்த்தி முதலிடத்தை கைப்பற்றினார். இதற்கு முன்னதாக, கும்கும் இடம்பெற்றிருந்த இந்திய பெண்கள் ரிகர்வ் அணி, தென் கொரிய அணியை 5–3 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இந்தப் பிரிவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது.