வில்லிவாக்கத்தில் கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு விழா... அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
31 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 31 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வில்லிவாக்கத்தில் கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு விழா... அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்பு

வில்லிவாக்கத்தில் கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு விழா... அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்பு

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிட்கோ நகர் சமுதாய நலக்கூடத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமூக வளைகாப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவை, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தாயின் அன்பும் ஆதரவும் ஒரு குழந்தைக்கு மிகப்பெரிய பலம் என்று குறிப்பிட்டார். தனது சிறுவயதில் தாயைப் பிரிந்த அனுபவம் இன்றுவரை மனதில் நீங்காமல் இருப்பதாகவும், அந்த இழப்பின் தாக்கம் தனது வாழ்க்கையில் தொடர்ந்து இருந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், விளையாட்டுத் துறையில் ஈடுபட்டது தனது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறிய அவர், சிறுவயதிலேயே விளையாட்டில் ஆர்வம் செலுத்தியதால் தவறான பாதைக்குச் செல்லாமல் தன்னைக் காத்துக்கொள்ள முடிந்ததாகவும் தெரிவித்தார். குழந்தைகளின் வளர்ச்சியில் தாய், தந்தை இருவரின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தினார். தாயின் முக்கியத்துவம் சாதி, மதம், பணம், புகழ் ஆகிய அனைத்தையும் கடந்து நிற்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கர்ப்பிணிப் பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சிறுவயது முதலே விளையாட்டில் ஈடுபடுத்துவதுடன், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தையும் உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு சவால்களைக் கடந்து முதலமைச்சர் பொறுப்பை அடைந்ததையும், விஜய் பல விமர்சனங்களை எதிர்கொண்டபோதும் தனது பயணத்தைத் தொடர்ந்து வருவதையும் குழந்தைகளுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்றார். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனித் திறமைகள் இருக்கும் என்பதால், அவற்றைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சாதிக்கக்கூடிய வகையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்றும், அவர்களது ஆர்வத்திற்கும் திறமைக்கும் ஏற்ப பெற்றோர் வழிகாட்டினால் உலக அளவில் சிறந்து விளங்கும் வாய்ப்பு உருவாகும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.