வில்லியா?.. நாயகியா? - கயாடு லோஹரின் போஸ்டரால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

வில்லியா?.. நாயகியா? - கயாடு லோஹரின் போஸ்டரால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

வில்லியா?.. நாயகியா? - கயாடு லோஹரின் போஸ்டரால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நானி மற்றும் கயாடு லோஹர் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரில், கயாடு லோஹர் புகைபிடிக்கும் காட்சியில் தோன்றியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கன்னடத்தில் வெளியான ‘முகில்பேட்டை’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான கயாடு லோஹர், தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடம் கவனம் பெற்றார். இதனைத் தொடர்ந்து, டொவினோ தாமஸுடன் இணைந்து நடித்த மலையாளப் படமான ‘பள்ளிச்சட்டம்பி’ கயாடு லோஹருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதன் பின்னர் ‘இதயம் முரளி’, ‘இம்மார்டல்’, ‘ஐ அம் கேம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘தி பாரடைஸ்’, ‘மஞ்சணத்தி’ ஆகிய படங்களிலும், நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றிலும் கயாடு லோஹர் நடித்து வருகிறார். இந்நிலையில், நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, நானி மற்றும் கயாடு லோஹர் இடம்பெற்றுள்ள புதிய போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. அதில் கயாடு லோஹர் புகைபிடித்தபடி இடம்பெற்றிருப்பதால், அவர் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேவேளையில், “அவர்களுடைய காதல் நீங்கள் இதுவரை கண்டிராதது போன்றது” என படக்குழு குறிப்பிட்டுள்ளது. இதனால் கயாடு லோஹர் படத்தின் நாயகியா, வில்லியா அல்லது கதையில் வேறு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதற்கான பதில் திரைப்படம் வெளியான பின்னரே தெரியவரும்.