விலைவாசியை கட்டுப்படுத்த தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Nov 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Nov 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

விலைவாசியை கட்டுப்படுத்த தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

விலைவாசியை கட்டுப்படுத்த தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில், சந்தையில் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. தவெக ஆட்சியில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் நிலை மோசமடைந்துள்ளது. விலைவாசியைக் குறைக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பல மாநிலங்களில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் அதன் வளர்ச்சி 3 சதவீதமாக மட்டுமே உள்ளது. திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாக மாநிலத்தின் ஜிஎஸ்டி வசூல் சரிவடைந்துள்ளது. நிர்வாகக் குறைபாடுகளால் ஏற்படும் வருவாய் இழப்பு, அரசின் நலத்திட்டங்களையும் கடுமையாகப் பாதிக்கும். தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் விஜய்தான் முதலமைச்சர். ஆனால், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கு மட்டும் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.