வியட்நாமில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

21 Jul 2026 www.thinathulir.com

வியட்நாமில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு

வியட்நாமில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு

வியட்நாமின் லம் டாங் மாகாணத்தில் இருந்து ஹோ சி மின் நகரை நோக்கி நேற்று இரவு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தில் மொத்தம் 24 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், டாங் நாய் நகரின் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களிலேயே தீ வேகமாக பரவியதால், பயணிகள் உயிர் தப்பும் முயற்சியில் அவசரமாக வெளியேற முயன்றனர்.எனினும், இந்த விபத்தில் 7 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர்.தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.