விமான நிலையம் முதல் வங்கிகள் வரை: இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய விதிமுறைகள்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

01 Sep 2026 www.thinathulir.com

விமான நிலையம் முதல் வங்கிகள் வரை: இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய விதிமுறைகள்

விமான நிலையம் முதல் வங்கிகள் வரை: இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய விதிமுறைகள்

விமான நிலையங்கள், எல்.பி.ஜி. இணைப்புகள் மற்றும் வங்கிகளில் மேற்கொள்ளப்படும் வைப்பு தொகைகள் தொடர்பாக செப்டம்பர் 1-ம் தேதி முதல் சில முக்கிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன.விமான நிலையங்களில் போர்டிங் பாஸுக்கு முத்திரை தேவையில்லை வெளிநாடு செல்லும் பயணிகள், விமான நிலையங்களில் உள்ள குடியுரிமை கவுன்டர்களில் போர்டிங் பாஸில் முத்திரை பெற வேண்டியதில்லை. இனி மின்னணு வடிவிலான அல்லது அச்சிடப்பட்ட போர்டிங் பாஸை காண்பித்தாலே போதுமானது. எல்.பி.ஜி. சிலிண்டருக்கு இ-கே.ஒய்.சி. அவசியம் எல்.பி.ஜி. இணைப்பில் இ-கே.ஒய்.சி. நடைமுறையை முடிக்காதவர்கள், வீட்டு உபயோக சிலிண்டரை சலுகை விலையில் பெற முடியாது. இதன் காரணமாக செப்டம்பர் மாதத்துக்கான எல்.பி.ஜி. சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ரூ.3 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட வைப்பு தொகைகளுக்கு புதிய விதிரூ.3 கோடி அல்லது அதற்கு அதிகமான வைப்பு தொகைகளுக்கான வட்டி விகித விவரங்களை வங்கிகள் தினமும் காலை 10.10 மணிக்குள் தங்களது இணையதளங்களில் வெளியிட வேண்டும்.மேலும், ஒரே நாளில் ஒரே தொகைக்கு செய்யப்படும் வைப்பு தொகைக்கு வெவ்வேறு கிளைகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்க முடியாது. வைப்பு தொகைகளுக்கான வட்டி விகிதத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.