தனது உடல் தோற்றம் குறித்த விமர்சனங்கள் மனதளவில் வேதனையை ஏற்படுத்தினாலும், அவற்றால் முடங்கிவிடப் போவதில்லை என்று பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் தெரிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைப்பின் சமீபத்திய தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. அவரது உடல் எடை அதிகரித்துள்ளதாக சிலர் விமர்சித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பலரும், ஒருவரின் உடல் தோற்றத்தை வைத்து கேலி செய்வது தவறு என்று குரல் எழுப்பினர். திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களும் இத்தகைய விமர்சனங்களுக்குக் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கத்ரீனா கைப், தனது தோற்றம் தொடர்பாக எழும் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், உடல் தோற்றத்தைப் பற்றிய விமர்சனங்கள் தனக்கு வேதனையை அளித்தாலும், அந்தப் பாதிப்பை வெளிப்படுத்தாமல் இருக்கத் தீர்மானித்துள்ளதாகக் கூறினார். இத்தகைய விமர்சனங்கள் ஒருவரின் தன்னம்பிக்கையைக் குறைத்து, அவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தும் நிலைக்குத் தள்ளக்கூடும் என்றும் தெரிவித்தார். ஆனால், விமர்சனங்களால் தன்னை முடக்கிக்கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், விமர்சனங்களுக்குப் பயந்திருந்தால் சினிமாவில் தொடர்ந்து இருந்திருக்க முடியாது என்று தெரிவித்த கத்ரீனா கைப், சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துகள் ஒருவரின் சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் பாதிக்க அனுமதிக்கக் கூடாது என்றார். சில நேரங்களில் பாராட்டுகளையும், மற்ற நேரங்களில் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், அவற்றைக் கடந்து செல்லும் மனப்பக்குவம் அனைவருக்கும் அவசியம் என்றும் அவர் வலிய