விநாயகர் சதுர்த்தி: மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

12 Sep 2026 www.thinathulir.com

விநாயகர் சதுர்த்தி: மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்

விநாயகர் சதுர்த்தி: மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் 14-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயில், அன்று இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயில், திருபுவனம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகளுக்கு இந்த சிறப்பு ரெயில் சேவை பயனுள்ளதாக இருக்கும்.