விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத்திய இணை மந்திரி எல். முருகன் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் இந்த சிறப்புமிக்க நாளில், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை பக்தியுடன் வழிபடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரங்களை போக்கி, தடைகளை அகற்றி, அனைவருக்கும் நல்ல உடல்நலம், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியை விநாயகப் பெருமான் வழங்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் எல். முருகன் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.