விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வி தி லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை, தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். விநாயகப் பெருமானின் அருளால், மக்கள் நினைத்த அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேற வேண்டும் என்றும், அனைவரது வாழ்க்கையிலும் வளம், நலம், மகிழ்ச்சி ஆகியவை பெருக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், குடும்பங்களில் அன்பும் அமைதியும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என வாழ்த்தியுள்ள அண்ணாமலை, அனைவருக்கும் மீண்டும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.