விநாயகர் சதுர்த்தி: ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில் இயக்கம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

13 Sep 2026 www.thinathulir.com

விநாயகர் சதுர்த்தி: ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி: ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில் இயக்கம்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அரசு விடுமுறை என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நாளைய மெட்ரோ ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை நடைமுறையில் உள்ள அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். அதன் சேவை இடைவெளி விவரம்: * காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை: 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரெயில்கள் இயக்கப்படும். *நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை: 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். * இரவு 8 மணி முதல் 10 மணி வரை: 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சேவை வழங்கப்படும். * இரவு 10 மணி முதல் 11 மணி வரை: 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளைய மெட்ரோ ரெயில் சேவை இந்த அட்டவணைப்படி நடைபெறும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.