விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: மதுரவாயல் - கோயம்பேடு சாலையில் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: மதுரவாயல் - கோயம்பேடு சாலையில் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுப்பு

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: மதுரவாயல் - கோயம்பேடு சாலையில் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுப்பு

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் சென்னைக்குத் திரும்பி வருகின்றனர். இதனால் சென்னையின் முக்கிய நுழைவுப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து, கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய நுழைவுப் பாதையான மதுரவாயல் முதல் கோயம்பேடு வரையிலான சாலையில், புதன்கிழமையான இன்று வாகனங்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. ஆம்னி பேருந்துகள், அரசுப் பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் வந்ததால், போக்குவரத்து மெதுவாக நகர்ந்து வருகிறது. ஜி.எஸ்.டி. சாலையிலும் கடும் நெரிசல் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடிகளைக் கடப்பதற்காக வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தாம்பரம் பகுதிகளிலும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன நீண்ட தூரம் பயணம் செய்து சென்னை திரும்பும் பொதுமக்களும், பணிக்குச் செல்வோரும் போக்குவரத்து நெரிசலால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், மழை காரணமாக தாம்பரம் சாலையிலும் வாகனங்கள் மெதுவாக நகர்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போக்குவரத்துக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.