விடுதலை வீரர் ஒண்டிவீரனின் 255-ஆம் நினைவு நாள்: அன்புமணி ராமதாஸ் புகழஞ்சலி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Aug 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Aug 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

விடுதலை வீரர் ஒண்டிவீரனின் 255-ஆம் நினைவு நாள்: அன்புமணி ராமதாஸ் புகழஞ்சலி

விடுதலை வீரர் ஒண்டிவீரனின் 255-ஆம் நினைவு நாள்: அன்புமணி ராமதாஸ் புகழஞ்சலி

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-ஆம் நினைவு நாளையொட்டி, அவரது வீரத்தையும் துணிச்சலையும் நினைவுகூர்வதுடன், அவர் காட்டிய தேசப்பற்று அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் சிப்பாய்க் கலகம் நடைபெறுவதற்கு முன்பே, 1755-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்றவர் பூலித்தேவன். அவரது படைத்தளபதியாகவும் நெருங்கிய நண்பராகவும் விளங்கியவர் ஒண்டிவீரன். அவரது 255-ஆம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவருக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். அவரது வீரத்தையும் தேசப்பற்றையும் போற்றுகிறேன்.ஆங்கிலேயர்களுக்கு எதிராக பூலித்தேவனும் ஒண்டிவீரனும் மேற்கொண்ட போராட்டங்கள் வீரமும் துணிச்சலும் நிறைந்தவை. 1755 முதல் 1760-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பூலித்தேவனுடன் இணைந்தும், சில நேரங்களில் தனித்தும் போராடிய ஒண்டிவீரன், ஆங்கிலேயர்கள் மற்றும் அவர்களின்ஆதரவுப்படைகளைகுறைந்தது6முறைதோற்கடித்தபெருமைக்குரியவர்.ஒண்டிவீரனின் நாட்டுப்பற்று போற்றுதலுக்குரியது. அவரது தேசப்பற்று மற்றும் வீர உணர்வை அனைவரும் பின்பற்ற வேண்டும்.