தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் அருண்ராஜ், முதல்-அமைச்சர் விஜய் தனது பிரசாரங்களின்போது மேற்கொள்ளும் சில செய்கைகளைப் போன்றே செய்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று நெருக்கமாக உரையாடிய அமைச்சர், விஜய் பாணியில் சில செய்கைகளை மேற்கொண்டபடி பிரசாரம் செய்தார். வாக்காளர்களை கவரும் வகையில் அவர் மேற்கொண்ட இந்த வித்தியாசமான பிரசாரம் அப்பகுதியில் கவனத்தை ஈர்த்தது. இதனை பொதுமக்களும் ஆர்வத்துடன் கவனித்தனர்.