விஜய் நம்மில் ஒருவர் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளார் - நடிகர் நானி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

18 Sep 2026 www.thinathulir.com

விஜய் நம்மில் ஒருவர் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளார் - நடிகர் நானி

விஜய் நம்மில் ஒருவர் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளார் - நடிகர் நானி

நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் சென்னை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நானி, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யை பாராட்டிப் பேசினார். நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘தசரா’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தி பாரடைஸ்’. எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில், இதுவரை தான் ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாக உள்ளது. மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நானி கூறியதாவது: “‘தி பாரடைஸ்’ படத்திற்காக நான் மிகவும் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உழைத்துள்ளேன். எனவே ரசிகர்களுக்கு தரமான படைப்பு காத்திருக்கிறது. தமிழ் சினிமா எனக்கு ஒரு பைபிள் போன்றது. கமல், மணிரத்னம், பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற ஜாம்பவான்களின் படைப்புகளை பார்த்துதான் சினிமாவை அணுகும் விதத்தை கற்றுக்கொண்டேன். தமிழக முதலமைச்சர் விஜய் மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கிறார். அவர் மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அவரது நட்சத்திர அந்தஸ்து அல்லது திரைப்பட வசூல் காரணமாக மட்டும் உருவானது அல்ல. சென்னைக்கு வரும்போதெல்லாம் சொந்த வீட்டிற்கு வந்ததைப் போன்ற உணர்வு எனக்கு ஏற்படும். இந்த நகரத்துடன் ஏதோ ஒரு முந்தைய பிறவி தொடர்பு இருப்பது போன்ற உணர்வும் எனக்கு எப்போதும் உண்டு. விஜய் முதலமைச்சராக இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மக்கள் எங்களுக்கு அளிக்கும் அன்பு அப்படிப்பட்டது. தமிழக மக்கள் விஜய் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிகப்பெரியது. அதிக வசூல் செய்யும் நடிகர் என்பதற்காக மட்டுமே மக்கள் அவருக்கு வாக்களித்ததாக நான் நினைக்கவில்லை. விஜய் நம்மில் ஒருவர் என்ற உணர்வை மக்களிடம் உருவாக்கியுள்ளார். சட்டசபையின் சில வீடியோ காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன். முதலமைச்சர் விஜய் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என்றார். இவ்வாறு ‘தி பாரடைஸ்’ படத்தின் சென்னை செய்தியாளர் சந்திப்பில் நடிகர் நானி தெரிவித்தார்.