விஜய் தேவரகொண்டாவுடனான முதல் சந்திப்பு குறித்து மனம் திறந்த ராஷ்மிகா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

விஜய் தேவரகொண்டாவுடனான முதல் சந்திப்பு குறித்து மனம் திறந்த ராஷ்மிகா

விஜய் தேவரகொண்டாவுடனான முதல் சந்திப்பு குறித்து மனம் திறந்த ராஷ்மிகா

நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனான ஆரம்பகால சந்திப்பு மற்றும் படப்பிடிப்பு அனுபவம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசியுள்ளார். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’, ‘பீஷ்மா’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் ‘சுல்தான்’ திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், இந்தியில் ‘அனிமல்’ படத்திலும் நடித்துள்ளார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ‘புஷ்பா’ படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மறைந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘எம்எஸ் - எ லேகசி ஆன் ஸ்கிரீன்’ திரைப்படத்திலும் ராஷ்மிகா நடிக்க உள்ளார். இதற்கிடையே, நீண்ட காலமாக காதலித்து வந்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா கடந்த பிப்ரவரி 26-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘ரணபலி’ திரைப்படம் வரும் 16-ம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி படக்குழுவினர் தீவிரமான புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இருவரும் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது ‘கீதா கோவிந்தம்’ படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து ராஷ்மிகா பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், படப்பிடிப்பு தளத்தில் தான் சத்தமாக பாடலை கேட்டுக்கொண்டிருந்தபோது விஜய் தேவரகொண்டா கோபமாக திட்டியதாக தெரிவித்தார். சினிமாவுக்கு புதிதாக வந்திருந்ததால் அந்த சம்பவத்தால் உடனே அழுதுவிட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், காலப்போக்கில் விஜய் தேவரகொண்டாவை புரிந்துகொண்டதாகவும், பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாக மாறியதாகவும் ராஷ்மிகா தெரிவித்தார். மேலும், “அவருடன் இணைந்து நடிக்கும்போது எனக்கு ஒருபோதும் பயம் இருந்ததில்லை. சக நடிகர்களுக்கு அவர் எப்போதும் சுதந்திரமான மற்றும் வசதியான சூழலை உருவாக்குவார். நாங்கள் இணைந்து பணியாற்றிய படங்களின் படப்பிடிப்பில், ஒவ்வொரு காட்சியையும் இன்னும் சிறப்பாக எவ்வாறு உருவாக்கலாம் என்பது குறித்து தொடர்ந்து ஆலோசிப்போம். இதுபோன்ற அனுபவங்களே திரைக்கு வெளியிலும் எங்களுக்குள் நல்ல புரிதலையும் வலுவான நட்பையும் உருவாக்க உதவின” எனத் தெரிவித்துள்ளார்.