விஜய்-அஜித் சந்திப்பு: கோவையில் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

விஜய்-அஜித் சந்திப்பு: கோவையில் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

விஜய்-அஜித் சந்திப்பு: கோவையில் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

தமிழக முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் லண்டனுக்கு சென்றிருந்தார். அப்போது நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார். இதற்காக பந்தய திடலுக்கு சென்ற விஜய், அஜித்குமாரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி, நெகிழ்ச்சியுடன் உரையாடினர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இதனால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது. இந்நிலையில், விஜய்-அஜித் சந்திப்பை கொண்டாடும் வகையில் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விஜய்யும் அஜித்குமாரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர்களில்,“சிவனும், சக்தியும் சேர்ந்தா மாஸ்டா” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த சுவரொட்டிகளை அஜித்குமார் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். மேலும், அவற்றில் “கோவை மாவட்ட அஜித் தலைமை செயலகம் ரசிகர் நற்பணி மன்றம்” என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், உளுந்தூர்பேட்டை அருகே நேற்று அஜித்குமார் ரசிகர்கள் இணைந்து புதிய அரசியல் கட்சியை தொடங்கியதாக கூறப்படும் நிலையில், கோவை மாவட்ட அஜித் ரசிகர்கள் விஜய் மற்றும் அஜித் இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.