விஜயகாந்த் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி புகழாரம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

விஜயகாந்த் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி புகழாரம்

விஜயகாந்த் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி புகழாரம்

தே.மு.தி.க. நிறுவனரும், தமிழ்த் திரையுலகில் முக்கிய ஆளுமையாக விளங்கியவரும், முன்னாள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மறைந்த விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் விஜயகாந்தை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.அதில், விஜயகாந்தின் திரைத்துறைப் பங்களிப்புகளையும், பொதுவாழ்வில் தமிழக மக்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பையும் நினைவு கூர்வதாக தெரிவித்துள்ளார்.மேலும், விஜயகாந்த் மறைந்தாலும், ‘கேப்டன்’ என்ற பெயரும் அவரது புகழும் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.