விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கணவர்: காவல் நிலையத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
14 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கணவர்: காவல் நிலையத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண்

விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கணவர்: காவல் நிலையத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண்

கணவரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததால், அவரை விடுவிக்கக் கோரி மனைவி காவல் நிலைய வளாகத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள ஒறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சாதிபதி. இவரது மனைவி கண்மணி (28). இவர் ஒறையூர் ஊராட்சியில் 'விபி-ஜி ராம் ஜி' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிதள பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். அதே ஊராட்சியில் அருள் (53) என்பவர் ஊராட்சி எழுத்தராக உள்ளார். இந்நிலையில், 125 நாள் வேலை வழங்குவது தொடர்பாக கண்மணிக்கும், ஊராட்சிஎழுத்தர் அருளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதையடுத்து, அருள் தன்னை தாக்கியதாக கண்மணி புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மறுபுறம், கண்மணியும் அவரது கணவர் லட்சாதிபதியும் தன்னை தாக்கியதாக அருளும் புகார் கொடுத்தார். இதற்கிடையே, அருள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருதரப்பு புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அருளை தாக்கியதாக எழுந்த புகாரில் லட்சாதிபதியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அமர வைத்திருந்தனர். இதையறிந்த கண்மணி, மாலை 4.30 மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்தார். தனது கணவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கூறியபடி காவல் நிலைய நுழைவாயிலை நோக்கிச் சென்றார். அப்போது, தன்னுடன் கேனில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனைப் பார்த்த போலீசார் அவரைத் தடுக்க முயன்றனர். ஆனால், கண்மணி கையில் வைத்திருந்த தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சியை உரசி தீ வைத்துக்கொண்டார். இதனால் அவரது உடலில் தீ வேகமாகப் பரவியது. தீப்பற்றிய நிலையிலேயே அவர் நுழைவாயிலில் இருந்து காவல் நிலையத்திற்குள் ஓடினார். எதிர்பாராத வகையில் நடந்த இந்த சம்பவத்தால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், உடனடியாக செயல்பட்ட அவர்கள் கண்மணியின் உடலில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு கண்மணிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, காவல் நிலையத்திற்குள்ளேயே பெண் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்மணியின் உறவினர்கள் காவல் நிலையம் முன்புள்ள அரசூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லச் செய்தனர்.