விஎஸ் பாபு உடல் நிலை குறித்து அறிய தனியார் மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

விஎஸ் பாபு உடல் நிலை குறித்து அறிய தனியார் மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகை

விஎஸ் பாபு உடல் நிலை குறித்து அறிய தனியார் மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகை

சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தவெக எம்.எல்.ஏ. விஎஸ் பாபு. கடந்த 9-ந்தேதி அதிகாலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சில நாட்களில் உடல்நலம் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஎஸ் பாபுவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஎஸ் பாபுவின் உடல்நிலை குறித்து முதல்-அமைச்சர் விஜய் தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாக அமைச்சர் அருண்ராஜ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விஎஸ் பாபுவின் உடல்நிலையை நேரில் அறிந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் விஜய் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்களை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதற்கிடையே, விஎஸ் பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருந்து வருவதாகவும் நேற்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.