வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருக்கும் தமன்னா: திடீர் மாற்றத்துக்குப் பின்னணி என்ன? ரசிகர்கள் ஆர்வம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
15 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 15 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருக்கும் தமன்னா: திடீர் மாற்றத்துக்குப் பின்னணி என்ன? ரசிகர்கள் ஆர்வம்

வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருக்கும் தமன்னா: திடீர் மாற்றத்துக்குப் பின்னணி என்ன? ரசிகர்கள் ஆர்வம்

இந்தியத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் தமன்னா, தனது அழகாலும் நடனத் திறமையாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து வரும் அவர், தற்போது சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘புருஷன்’ படத்தில் தமன்னா நடித்துள்ளார். அதேசமயம், இந்திப் படங்களிலும் அவர் பிஸியாக நடித்து வருகிறார். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட தமன்னா, சமீபகாலமாகப் பல்வேறு கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மனதில் வைத்திருக்கும் முக்கியமான வேண்டுதல் ஒன்றிற்காக அவர் ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், துர்க்கை அம்மனை வழிபட்டு வரும் அவர், வாரத்தில் மூன்று நாட்கள் விரதம் இருப்பதாகவும், சில நேரங்களில் காலை உணவையும் தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமன்னாவின் இந்த ஆன்மிகப் பயணமும் விரத முறையும் தற்போது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தத் திடீர் மாற்றத்துக்கான காரணம் என்ன, அவர் ஏதேனும் முக்கியமான அறிவிப்பை வெளியிடப் போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கான உண்மையான காரணம் என்ன என்பது தமன்னா விளக்கினால் மட்டுமே தெரியவரும்.