வள்ளலார் காட்டிய அன்பு, கருணை வழியில் பயணிப்போம்: அண்ணாமலை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வள்ளலார் காட்டிய அன்பு, கருணை வழியில் பயணிப்போம்: அண்ணாமலை

வள்ளலார் காட்டிய அன்பு, கருணை வழியில் பயணிப்போம்: அண்ணாமலை

வள்ளலார் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலை, ‘எக்ஸ்’ தளத்தில் வள்ளலாரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், அன்பையே இறைவனின் வடிவமாகக் கருதி, அனைத்து உயிர்களிடத்திலும் அன்பும் கருணையும் காட்டுவதன் மூலம் இறைவனை அடைய முடியும் என்ற உயர்ந்த கருத்தை உலகுக்கு எடுத்துரைத்தவர் திருவருட்பிரகாச வள்ளலார் என குறிப்பிட்டுள்ளார். ஆன்மிக விழிப்புணர்வால் சமூகத்தில் நிலவும் தீமைகளை அகற்ற முடியும் என்றும், சாதி வேறுபாடுகள் இல்லாமல் அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த சமூகமே சிறந்த சமூகமாகும் என்றும் வள்ளலார் வலியுறுத்தியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உருவாக்கப்படும் சாதி மற்றும் சமூக வேறுபாடுகளை வள்ளலார் ஏற்கவில்லை என்றும், ஜீவகாருண்யத்தை தனது வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தார் என்றும் அவர் கூறியுள்ளார். வள்ளலார் நிறுவிய வடலூர் சத்திய ஞான சபை மூலம், சாதி, மதம், இனம், மொழி உள்ளிட்ட எந்த வேறுபாடுகளையும் பார்க்காமல் பசியால் வாடும் அனைவருக்கும் உணவு வழங்கும் மனிதநேயப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். “அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்” என்ற உயர்ந்த கொள்கையை உலகுக்கு போதித்த வள்ளலார் பெருமானை போற்றி வணங்குவோம் என்றும், “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை” என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.