வெள்ளைமாளிகையில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வெள்ளைமாளிகையில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்பு

வெள்ளைமாளிகையில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறவுள்ள தீபாவளி விழாவில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பங்கேற்க உள்ளார். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை, 10ஆம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள ஓவல் அலுவலகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்து கொள்ளவிருக்கிறார். வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடத்தும் வழக்கம் 2003ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தீபாவளி விழாவில் அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா பங்கேற்றார். இதன் மூலம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் நேரடியாகக் கலந்து கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற சிறப்பை ஒபாமா பெற்றார்.